வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மற்றும் குஜராத் மாநிலகளுக்கு மத்திய அரசின் கூடுதல் உதவியாக 707.97 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.மேலும் இந்த உயர்நிலைக்குழு ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் […]

கரூர் துயரத்தால் முடங்கியிருக்கும் விஜய்யிடம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருமே நேரில் சென்று ஆறுதல் சொல்லிவிட்டனர். மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனும் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல் பாஜக தலைவர் நட்டா […]

திமுக அரசு, கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை. இது குறித்து அண்ணாமலை தனது அறிக்கையில்; மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், கடந்த 1951- ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் திரு. குமாரசாமிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனை, கடந்த சுமார் 60 ஆண்டுகளாக, ஆதீனம் சார்பாக, […]

கல்விக்கான நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் வகுத்து குழந்தைகளின் நலனில் மத்திய அரசு விளையாட வேண்டாம் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; நடப்பு கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் டிசம்பருக்குள் முடிக்கப்படும். 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான நிதியை தான் தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது. பொதுவாகவே மத்திய […]

கமல்ஹாசனின் நடுநிலையான பேச்சு, உங்களைப் போன்ற என்டெர்டெய்னர்களுக்கு புரியாது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப் பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளை தரம் பார்க்காமல் எல்லோர் மீதும் கொட்டுவதும் வழக்கமாக கொண்ட பிஜேபியாலேயே புறக்கணிக்கப்பட்ட அண்ணாமலை இன்று எங்கள் தலைவரைப் பற்றி, […]

போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காவேரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்குப் பின் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் முறையாக கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல் மணிகளுடன் பல நாட்கள் வெயிலிலும், மழையிலும் […]

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் […]