வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். காசிநாதன் பல்வேறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், பழமையான சிற்பங்கள், நடுகற்களை கண்டுபிடித்த பெருமைக்குரியவர். தமிழரின் தொன்மையை நிலைநாட்ட பூம்புகார் ஆழ்கடலாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். வட்டெழுத்துக் […]

தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பா.ஜ.க-வினர் மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் வீடியொ வெளியிட்ட நிலையில், அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதி. விவசாயிகளான இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி. தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான […]

கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதிகள் மீது அவதூறு பரப்பிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு பிறகு, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் உரிய நிபந்தனைகளை விதிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என். […]

பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிகள் […]

தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை திமுக அரசு உறுதி செய்யவில்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தளத்தில்: முதல்வரின் சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூர் சட்டபேரவைத் தொகுதி திருப்பதி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் குப்பன், விஷவாயு தாக்கி உயிரிழந்த செய்தி மிகுந்த […]

ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் […]

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தக் கூட்ட நெரிசல் தொடர்பாக கரூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் இவ்வழக்கை […]