கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தக் கூட்ட நெரிசல் தொடர்பாக கரூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் இவ்வழக்கை […]

நள்ளிரவில் வி.கே.சசிகலா வீட்டிற்குள் மர்ம நபர் நுழைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவின் வீடு சென்னை போயஸ்கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், சசிகலாவின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்ததாக மர்ம நபர் பிடிபட்டுள்ளார். அவர் நள்ளிரவு நேரத்தில் சசிகலாவின் வீட்டிற்கு நுழைந்ததாக கூறி அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். பின்னர், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று […]

உயிரிழந்த நிர்வாகி ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்ட சம்பவம் ஈரோடு மாவட்ட அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 5-ம் தேதி, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் நாங்களே ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வோம் என அறிவித்திருந்தார். இதையடுத்து அதிமுகவில் செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் […]

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் […]

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த செப்.27ஆம் தேதி விஜய் பிரசாரத்தின்போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாமக்கல் காவல்துறையினர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை தன்னை கைது செய்யலாம் என அஞ்சி, சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், […]

சென்னை – மதுரை இடையே தினமும் நடைபெறும் விமானப் போக்குவரத்து சேவையில், நேற்று மதியம் ஏற்பட்ட ஓர் எதிர்பாராத நிகழ்வு, பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. சென்னையில் இருந்து சரியாக பகல் 12.40 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். விமானம் மதுரை விமான நிலையத்தை நெருங்கி, பகல் 1.45 மணியளவில் தரையிறங்க ஆயத்தமானது. ஓடுபாதையில் […]

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய 5 தனிப்படை விரைவு. கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருந்து வரும் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு […]