தமிழ்நாட்டில் இன்னும் 5 மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக, விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு தரப்பினரும் அவரை விமர்சித்து வரும் நிலையில், நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் குறித்து கருத்து தெரிவித்த அவர், பாஜகவை ஆதரிக்கும் அல்லது அந்த கூட்டணியில் இருக்கும் […]

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மீண்டும் எப்போது பிரச்சாரம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கரூரில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் காரணமாக பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்த நிலையில், கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சோக நிகழ்வு, […]

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம் ஆபத்தானது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மது வகைகளை சிறிய அளவிலான காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது; இது குழந்தைகளின் வாழ்வில் மிக மோசமான விளைவுகளை  ஏற்படுத்தி விடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  உச்சநீதிமன்றத்தின் […]

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி ஜெயராமன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதுவரை 86 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ‘ஒன் டு ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, முன்வைக்கப்படும் […]

திரையில் வெற்றிகரமான உச்ச நடிகராக வலம் வந்த விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.. ஆரம்பம் முதலே விஜய் மீது வைக்கப்படும் விமர்சனம் அவர் மக்களை நேரடியாக சந்திக்காது தான்.. ஆனால் மக்களை சந்திக்க பயணம் மேற்கொண்ட போது தான் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் […]

ராமேஷ்வரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், சேராங்கோட்டையை சேர்ந்த ஷாலினி என்ற பெண் 12-ம் வகுப்பு மாணவியை முனிராஜ் என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். வழக்கம் போல் இன்று பள்ளி சென்ற மாணவியை வழிமறித்து முனிராஜ் பேசியுள்ளார். மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதில் மாணவி […]

வாக்குச்சாவடி  நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அனைத்து நிலை […]

சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்கான ரூ.309 கோடி நிதி எங்கே சென்றது என திமுக அரசுக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் […]