கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே நல்லூரான்பட்டியில், மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அரசு மானிய உர மூட்டைகளை வேறு சாக்குப் பைகளுக்கு மாற்றி, வணிக நோக்கில் விற்பனை செய்யும் முறைகேடு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் மத்திய அரசின் மானிய விலையில் உர மூட்டைகள் வழங்கும் திட்டத்திற்கு, 2026–27 ஆம் நிதியாண்டிற்கான […]

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் உடல்மொழி மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் இருந்ததாகவும், இது மனித மாண்புகளுக்கு எதிரானது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதல்வர் தரப்பில் ‘உள்நோக்கம் கொண்டதல்ல’ என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அத்தகைய உடல்மொழி கண்ணியமான அணுகுமுறை அல்ல; அது மனித மாண்புகளுக்கு எதிரானது. அரசியல் விமர்சனங்கள் வேறு, […]

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரஸ் (5 இடங்கள்), விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அரசை அமைத்தது. இந்நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (செப். 9) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் […]

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் […]

சட்டப்பேரவை விதிகளை மீறி ஆதாரமற்ற அவதூறுகளைப் பேசியதாக முதலமைச்சர் விஜய் மீது திமுக துணை கொறடா கோவி. செழியன் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின் போது முதலமைச்சர் விஜய் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய பேரவைக் கூட்டத்தில் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “எனது நீண்ட சட்டமன்ற அனுபவத்தில் பல முதல்வர்களைப் பார்த்துள்ளேன்; அவர்கள் […]

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது தான் வெளிப்படுத்திய உடல்மொழி முற்றிலும் எதேச்சையானது என்றும், எந்தவொரு தனிநபரின் மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் விரிவான பதிலுரையாற்றினார். அப்போது, கடந்த கால திமுக ஆட்சி மற்றும் சர்க்காரியா ஆணைய விவகாரங்களை […]

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் மிக முக்கியமான அத்தியாயம் சர்க்காரியா ஆணையத்தின் விசாரணை மற்றும் அதன் அறிக்கை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். திமுகவில் இருந்தபோது அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த எம்.ஜி.ஆர், அதன் தொடர்ச்சியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிமுகவை தொடங்கிய அவர், திமுக அரசு மீது தீவிர ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த […]

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகள் ஏதுமின்றி இருக்கும் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (செப். 9) தொடங்க உள்ள நிலையில், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் […]

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் வழக்குகள் ஏதுமின்றி இருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக […]

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரைக்கு, திமுக எம்பி கனிமொழி கண்டம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், “வரலாறு பேச வேண்டுமென்றால் நீதிக்கட்சி காலத்திலிருந்தும், தமிழ்ச் சமூகத்துக்காக திமுக என்ன செய்தது என்பதிலிருந்தும் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என சாடியுள்ளார். கலைஞர் […]