தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், பாஜக உடன் கை கோர்த்துள்ளது அதிமுக.. மேலும் சீமானின் நாம் தமிழர், விஜய்யின் தவெக ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த சூழலில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்த முறை […]

தமிழக வெற்றிக் கழகத்தின் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக […]

சமீபகாலமாக, தெருநாய் பிரச்சனை பொதுமக்களுக்கும் விலங்கு நல ஆர்வலர்களுக்கும் இடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது தனிப்பட்ட பாணியில் இந்தப் பிரச்சனைக்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் தீர்வைக் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், “தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, விலங்கு நல ஆர்வலர்கள் அவற்றுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு?” என்று கேட்கப்பட்டது. “தீர்வு மிகவும் எளிது” என்று […]

டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் ஐயா வைகுண்டர் குறித்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கலியுகத்தை அழித்து உலகில் தர்மயுகத்தை ஸ்தாபிக்க அவதார மெடுத்த ஐயா வைகுண்டரை பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஆங்கிலக் கேள்வியில், ‘God of hair cutting’ என்று இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. தென்தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களால் போற்றப்படுபவரும், தெய்வீக நிலையை அடைந்தவருமான […]

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில், ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தால், என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், மேலூர் பேருந்து நிலையத்தில் […]

தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் திமுக அரசு நடத்துவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள் சுமார் 2,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதில்லை. விவசாயிகளிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல், கொள்முதல் செய்த பாலை, […]

பத்திரப்பதிவு எங்கு நடந்தாலும் அமைச்சருக்கு 10 % கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழலை தோண்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் நேற்று மதுரை ஒத்தக்கடையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: அதிமுக ஆட்சியில் தான் அதிக போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு அனுமதி வழங்கினோம். போராட்டங்களை சந்திக்கும் தில், […]