2026-ல் அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் குறைக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று குன்னூர் தொகுதியில் பேசிய அவர்; திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்தது, இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா..? இதே […]

மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருவதாகவும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி; சிறப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி 60 சதவிகித மனுக்கள் வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருகிறார். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி […]

மதுரை அருகே அரசு மாணவர் விடுதியில் மாணவர் தாக்கப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு […]

ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருட்களின் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரிகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருட்களின் விலைகளை கணிசமாக குறைத்திருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் அத்தகைய விலைக் குறைப்பை செய்யாமல் உயர்த்தப்பட்ட விலைகளிலேயே […]

திமுகவை கண்டித்து சட்டமன்ற தொகுதி வாரியாக பாஜக சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் வினோஜ் பி செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் மலிவு, பல்கிப் பெருகியுள்ள போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு என சகல விதத்திலும் தோல்வி அடைந்த ஆட்சியை திமுக அரசு நடத்தி வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழக […]

கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காதவர் என பிரதமர் மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம். இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு நிமிர்ந்து நிற்கும் வகையில் முதுகெலும்பைக் கொடுத்தவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றி பிரதமர் திரு மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. வரலாற்றுச் […]

கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான […]