கடந்த 2023-ம் ஆண்டு திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான […]

1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார். தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 5000 […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.. இந்த சூழலில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறி ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியலில் பெரும் […]

தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் 2026 தேர்தலை முதல் முறையாக சந்திக்க உள்ளார்.. தனது கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக எனவும் கூறியுள்ள அவர் திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.. அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் விஜய் திமுகவை சாடினார்.. 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் […]

தமிழக அரசின் சமூகநல விடுதிகளில் மாணவர்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “ சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும் திருமதி. லட்சுமி என்பவர், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும், குளியலறை மற்றும் கழிவறை பயன்பாட்டில் மாணவிகளுக்குப் பாரபட்சம் […]

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1.4.2003 முதல் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு பணி […]

திமுக தலைவர் மு.க.ஸ்ஸ்டாலின் தலைமையில் கட்சியின் எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 23.09.2025 செவ்வாய் கிழமை, காலை 10.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்டஅரங்கத்தில் நடைபெறும். அதுபோது, திமுக மக்களவை – […]

கடந்த 4 ஆண்டுகளில் 37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழரின் அறிவுக் கருவூலங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் நோக்கத்துடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மூலம் தமிழ் மின் நூலகம் தொடங்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மின் […]

நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள், நவராத்திரியின் முதல் நாளான நாளை (செப்டம்பர் 22, 2025) முதல் அமலுக்கு வருகின்றன. இந்த நற்செய்தியை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது உறுதிப்படுத்தினார். பிரதமர் மோடி பேசுகையில், நாளை முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ளது. நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்கள். நவராத்திரியின் முதல் நாளில் […]