ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப் பட்டதில் மகிழ்ச்சி. தற்கொலைகளும், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதற்கும் முடிவு கட்டப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை […]

I.N.D.I.A கூட்டணி கட்சிகள் கடைப்பிடிக்கும் ஒரே அரசியலமைப்பு, ஊழல் மட்டுமே என்று அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமருக்குக் கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்துவிட்டது என்று பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தத்துக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஆச்சரியமில்லை என பாஜக முன்னாள் […]

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி தலைமையில் ஏராளமானோர் மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த்திடம் நேற்று புகார் மனு அளித்தனர். புகார் மனு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 18ம் தேதி பிரசாரம் செய்தார். […]

கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட பிரதமர் அல்லது முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார்.. ஆனால் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்த்தனர்.. இதனால் மக்களவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.. இருப்பினும், ஷா, மூன்று மசோதாக்களையும் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜே.பி.சி) மேலும் விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று […]

தவெக மாநாட்டுத் திடலில் கொடிக்கம்பம் விழுந்தது தொடர்பாக நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி உள்ளார்.. தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.. 1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்திற்கு ராம்ப் வாக் மேடை என மதுரையே களைக்கட்டி உள்ளது.. […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.. 1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட […]

தவெக மாநாட்டு திடலில் நடப்பட்ட கொடிக்கம்பம் சாய்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை […]

ஓய்வூதியர் பணப்பலன் வழங்குவதற்காக ரூ.1,137 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்காலிக முன்பணமாக (கடன்) தமிழக அரசு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்த உத்தரவில்: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதியுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். இதை பரிசீலித்த அரசு, […]