தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தோட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நேற்றில் இருந்து தொடங்கப்பட்டன.அதில் ஒரு பகுதியாக இன்று விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவெண்ணைய் நல்லூர் பிரிவில் 3500 மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விழுப்புரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர், ஆகிய மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் பணி இன்று நடைபெற்றது. இதனை […]

தெலங்கானா மாநில அமைச்சர் பயணம் செய்துகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலிருந்து நூலிலையில் அமைச்சர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சரான காங்குலா கமலாகர், தெலங்கானா மாநிலம் உருவாகி பத்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.  தெலங்கான மாநிலம் கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகருக்கு […]

அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அதிமுகவின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவின் பொது செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வருகின்ற 13ஆம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்ட […]

இந்த வருடம் டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்காமல் போனதற்கு அதிகாரிகளே காரணம் என்று உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சுமத்தி இருக்கிறது. அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுவின் சார்பாக வருடம் தோறும் தேசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்றுக் கொள்ளும் மாணவர்களை அந்தந்த மாநில அரசு தேர்வு செய்து போட்டிக்கு அனுப்புகின்றனர். அதன்படி இந்த வருடத்திற்கான விளையாட்டு […]

குறுவை சாகுபடிக்காக எதிர்வரும் 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற ஆறுகள் மற்றும் சிறு,குறு வாய்க்கால்களின் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீர்வளத் துறையின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து வருகின்றார். […]

ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியது தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் […]

தருமபுரி பழைய ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன். இவரது தந்தை தர்மபுரி 8-வது வார்டு வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் ஹர்ஷா (வயது 23). மருத்துவ மருந்து பிரிவில் பட்டபடிப்பு முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தருமபுரியில் இருந்து ஓசூருக்கு சென்ற இந்த பெண் நேற்று […]

பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்பதற்காகவே தேதி கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக 1,87,693 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட, நடப்பாண்டில் 18,610 விண்ணப்பங்களாக அதிகரித்துள்ளது. 7.5% இட ஒதுக்கீட்டில் 7,582 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். சலுகைகளின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 394 […]

திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை தலைமைச் செயலாளராக நியமிக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், அவரது சாய்ஸ்சாக  அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டு வைக்கப்பட்டிருந்த இறையன்பு இருந்தார்.  எந்த அழுத்தத்திற்கும் வளைந்து கொடுக்காதவர், மக்களின் மன நிலையை அறிந்தவர், அதோடு மனிதநேயம் கொண்ட பண்பாளரான அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளராக தேர்வு செய்ததை எண்ணி எதிர்க்கட்சிகளே வியந்தன. ஆட்சி அமைந்தது முதல் இரவு, பகல் பாராது […]

மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ப்ரகலா வாங்மயிக்கு, ப்ரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் தனியார் ஹோட்டலில் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாம். வழக்கமாக, அரசியல் தலைவர்களின் பிள்ளைகளுக்கு, பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று […]