திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி, அங்கிருந்த விவசாயி சகாதேவனை(45) கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

முன்னாள் அமைச்சராக இருந்தவர் தங்கமணி. 2021 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தங்கமணி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழும் தங்கமணி, அதிமுகவில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் திமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட தங்கமணி, “நான் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பதாகவும், திமுகவில் இருந்து எனக்கு […]

2026-ல் மீண்டும் ஆட்சியமைக்க ஓய்வின்றி களப்பணியாற்ற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்; சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்சனைகளை களையவும், மக்கள் குறைகளை தீர்க்கவும் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின், ‘தாயுமானவர் திட்டம்’ ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறோம். நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கட்சி நிர்வாகிகள் […]

கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ வெட்கமே இல்லாமல் பேசுகிறார் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ஏழைகளை குறிவைத்து கிட்னி திருட்டு குற்றங்கள் அதிகரித்து வருவதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில், இடைத்தரகர் ஆனந்தன் என்பவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இவர் திமுக நிர்வாகி […]

சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் அண்ணாமலை இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள 3 மீன் கழிவு ஆலைகளால், கடந்த 4 ஆண்டுகளாக, அந்தப் பகுதியில் மண்வளம், நிலத்தடி நீர் மற்றும் காற்று ஆகியவை மாசுபட்டு, பொதுமக்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர். […]