fbpx

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாமக தலைமையில் புதிய கூட்டணி அமையும் என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்‌ தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 34-வது ஆண்டு விழா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸின் 84-வது பிறந்தநாள் விழா ஆகியவை திண்டுக்கல் மாவட்ட பாமக சார்பில் இருபெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாமக மாநில …

தமிழ்நாடு நிதியமைச்சரைக் குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களைக் குறிவைத்து காலணி வீசியுள்ள பாஜகவினரின் அநாகரிகச் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வடமாநிலங்களில் காலங்காலமாக கடைபிடித்துவரும் …

செருப்பை உரியவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்ட பாஜக தலைவராக …

மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன், கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அமைச்சர் …

நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக நிதியமைச்சரை சந்தித்து மன்னிப்புக் கோரிய டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இச்சம்பவம் தமிழக அரசியலில் …

பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி மும்பையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 86. வயது தொடர்பான நோய்களால் காலமானார். அவர் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் வாழ்கிறார்.

ஆல் இந்தியா ரேடியோவை ஆர்வத்துடன் கேட்பவர்கள் அவரது குரல், தெளிவான பேச்சு மற்றும் சரியான இடங்களில் இடைநிறுத்தப்பட்டதை …

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகர் பகுதியில் இருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அப்பொழுது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது,

நாட்டு மக்கள் அனைவரும் தேசிய கொடியை ஏற்றும் பாக்கியத்தை பாரத …

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை தனது வீட்டில் ஏற்றியதற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாவட்டத்தின் தாரியா சுஜான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில் நேற்று காலை 11 மணியளவில் பாகிஸ்தானின் தேசிய கொடியை ஏற்றியுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த …

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜ்ஜவுரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர் லட்சுமணன் உட்பட நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் இருக்கும் ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பிறகு, இன்று காலை 13-ஆம் தேதி தனி விமானம் மூலம் …

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.. பெரிய அளவில் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.. இதனிடையே சாமானிய மக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், …