2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி; ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று கட்சியில் சேர சொல்லி […]

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் இன்று பாமக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்குமாறு தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான திமுக அரசு, இன்னும் இரு மைல்கல்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1200 நாள்களாகும் […]

விசாரணை என்ற பெயரில் மதுரை ஆதீனத்தை தமிழ்நாடு காவல்துறையை வைத்து திமுக தொந்தரவு செய்து வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக காவல்துறை இன்று மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து மத குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது இந்தத் திமுக அரசு. […]

2026 சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி படுதோல்வி அடைவார் என நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை அரங்கேற்றி நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டிரியல் ஆகிக் கொண்டிருக்கிறார். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் […]

அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று நாமக்கலில்ல் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு நியாயமு நீதி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.. அதிமுக – பாஜக கூட்டணியை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை.. திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரே […]

கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.. முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க முத்து.. மு.க. முத்துவின் தாயார் பத்மாவதி, பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி ஆவார். பல திரைப்படங்களில் நடித்துள்ள மு.க முத்து, சிறந்த பாடகராகவும் இருந்தார். 1970களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். பிள்ளையோ பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, […]

தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது அதிருப்தி அலை நிலவிவரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெகவிற்கு 39% ஆதரவு கிடைத்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த தனியார் செய்தி சேனல் நடத்திய ஆய்வில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் தலைமுறை வாக்காளரிடம் உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு, திமுக […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-21 வரை எம்எல்ஏவாகப் பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம். அதே காலத்தில் அவரது கணவரான பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக இருந்தார். பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதன் பின்னர் கட்சிப் பணிகளில் தீவிரமாக சத்யா பன்னீர்செல்வம் […]

நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சையாக பேசிய வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதை பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை […]

இதழியலைத் தொழிலாக தொடங்க விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் முதுநிலை பட்டயப் படிப்பினை (Post Graduate Diploma Course) வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் “சென்னை இதழியல் நிறுவனத்தை” தொடங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, ஊடகக் கல்வியை வழங்குவதற்காகவும், இதழியலைத் தொழிலாக தொடங்க […]