நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் கல்வி விழா குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வேல்முருகன் இருக்கும் இடம் தெரியாமல் போவது நிச்சயம் தவெகவின் இணை செயலாளரான தாஹிரா எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10, 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை பாதுகாப்பாக தங்க வைத்து, கல்வி விழாவில் பங்கேற்க செய்து, அவர்களைக் […]

நடிகர் விஜய், எப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தாரோ, அப்போதில் இருந்து அவரை சுற்றி பிரச்சனைகள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. கட்சிப் பெயரில் தவறு, சின்னம் சர்ச்சை, அது வெற்றிக்கான பூவே கிடையாது என்று பல கருத்துகள் உலா வந்தன. ஆனால், அதையெல்லாம் விஜய் பெரிதாக கண்டுகொள்ளாமல், தன்னுடைய அரசியல் பணியை தீவிரமாக செய்து வருகிறார். இதற்கிடையே, தவெக-வின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளது. இதற்கு […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு நேற்று (04.06.2025) முதல் தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் […]

ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸை சமாதானப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அன்புமணி ராமதாஸ் பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, […]

கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க நிர்வாகிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. மேலும் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, அன்புமணிக்கு ஆதரவு அதிகமாகவுள்ள பகுதிகளை குறிவைத்து, அங்கிருக்கும் நிர்வாகிகளை ராமதாஸ் மாற்றி வந்ததாக கூறப்பட்டது. […]

ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். மூத்த குடிமக்களை மையமாக வைத்த பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக மாதிரிக்கு இணங்க, ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை கால வரம்பிற்குள் நிறைவேற்ற மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிபொறுப்பு), பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 13-வது […]

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடங்களுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்காக, தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் […]

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக – தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் அறிவித்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி வலுவாக இணைந்து செயல்பட்டு வருகிறது. பின்னர், அதிமுக – தவெக கூட்டணி அமையப் போவதாக […]

பாமக சார்பில் பொதுக்குழுவை கூட்டுவதற்காக புதிய மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தில் இருக்கிறது. அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான விமர்சனங்களை வைத்து வருகிறார். அன்புமணி ராமதாஸ் பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று ராமதாஸை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, ராமதாஸின் கொள்கையை கையில் […]

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,302ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு முதியவர், இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள உயிரிழந்துள்ள சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 4 பேரும், டெல்லி, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் என […]