தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவே, வருடத்தின் பாதி நாட்கள் நீருக்குள் மூழ்கி காட்சி தரும் அதிசய முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. “குறுக்குத்துறை முருகன் கோவில்” என அழைக்கப்படும் இத்தலம், திருச்செந்தூர் திருத்தலத்திற்கு நிகரான ஆன்மிகச் சிறப்பை பெற்றதாக பக்தர்கள் கருதுகின்றனர். பொதுவாக முருகன் கோவில்கள் மலை மேல் அமைந்திருக்கும் போது, திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளதென்பதும், குறுக்குத்துறை கோவில் மட்டும் ஆற்றின் நடுவே இருப்பதென்பதும் […]
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
வழக்கமாக பெருமாள் கோவில்களில் மட்டுமே பக்தர்களுக்கு சடாரி சேவை வழங்கப்படும். ஆனால் நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் எனப்படும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் வேறு எந்த சிவன் கோவிலிலும் இல்லாத தனிச் சிறப்பாக ஜடாரி சேவை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோவிலின் தனி சிறப்புகள்: * ஒரு நாளில் ஐந்து முறை, அதாவது 2.5 மணி நேரத்திற்கு ஒருமுறை, இங்கு இருக்கும் சுயம்பு சிவலிங்கம் தனது நிறத்தை மாற்றுகிறது. * ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள், […]
கருட புராணம் இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக, ஒருவர் இறந்த பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ன மாதிரியான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன என்பதையும் இது குறிப்பிடுகிறது. இருப்பினும், கருட புராணத்தின் படி.. பெண்கள் தவறுதலாக கூட பல விஷயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் என்ன மாதிரியான விஷயங்களைச் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கருட புராணத்தின் படி, எந்த காரணமும் இல்லாமல் நீண்ட காலமாக கணவரிடமிருந்து பிரிந்து […]
சென்னை மிண்ட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், பஞ்சபூத தலங்களில் பூமித் தலமாக விளங்குகிறது. இந்த பழமையான சிவாலயத்தில், அம்பாளுக்கு எதிரே சனீஸ்வரர் வீற்றிருப்பது என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. எனவே, இத்தல அம்மனை வழிபட்டால் சனி தோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இக்கோவிலில் உள்ள சப்தநாக உருவத்தில், முன்புறம் விநாயகர் மற்றும் பின்புறம் முருகன் அருள்பாலிப்பதும் மற்றொரு ஆச்சர்யமான அம்சமாகும். 1680களில், ஆங்கிலேய ஆட்சி காலத்தில், […]
எதிர்காலத்தை கணிக்கும் திறன் கொண்டவர் என்று அறியப்படுபவர் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா. இவர், 2025 ஆம் ஆண்டில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகள் குறித்து கணித்துள்ளார். அவரது பல கணிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் துல்லியமானவை என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, அவர் 9/11 தாக்குதல்கள் மற்றும் இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட உண்மையான நிகழ்வுகளை பாபா வங்கா முன்பே கணித்திருந்தார். முக்கிய நிகழ்வுகள் மட்டுமின்றி, ராசிகளுக்கான பணவரவு குறித்தும் அவர் […]
இழந்த அழகை திரும்ப பெற, கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்க, செல்வம் பெருக, அண்ணன் தங்கை ஒற்றுமை நீடிக்க தரிசிக்க வேண்டிய ஆலயம் ஒன்று உள்ளது என்றால் அது திருக்கள்வனூர் கள்வ பெருமாள் கோவில்தான். காஞ்சிபுரம் நகரின் புனிதமான பாசுரங்களுக்கு நடுவே, திருக்கள்வனூர் என்றழைக்கப்படும் ஒரு அரிய தலத்தில், கள்வப் பெருமாள் திகழ்கிறார். இது திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 55வது தலம் ஆகும். இது தனிச்சிறப்புடன் காணப்படும் தலம். […]
இந்து மதத்தில், ‘ஓம்’ என்று உச்சரிப்பது ஆன்மீக ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, சிறப்பு என்னவென்றால், அது ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் அற்புதம். ‘ஓம்’ என்று உச்சரிப்பது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், இதயம், நுரையீரல் மற்றும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நிபுணர்களின் கருத்துக்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஓம் என்பது விழிப்புணர்வின் ஒலி அல்லது ‘முதல் ஒலி’ என்றும் கருதப்படுகிறது. இயற்பியல் படைப்பு தோன்றுவதற்கு […]
திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள். அப்படி திருப்பதி ஏழுமலையானின் மறு உருவமாக அமைந்திருக்கும் ஒரு கோவில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். திருப்பதி ஏழுமலையான் என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள், திருமணத்திற்காக குபேரனிடம் பெற்ற கடனுக்காக ஒரு கட்டத்தில் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார். அப்போது அந்த கடன் பிரச்சனையைத் தீர்த்து வைத்த புனிதத்தலம் தான் சில்பூர் புகுலு வெங்கடேஷ்வர சுவாமி கோவில். இந்த கோவில் தெலுங்கானா மாநிலம் […]
9 கிரகங்களில் சனி பகவான் மட்டும் நீதிபதி என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீஞ்செயல்களுக்கு ஏற்ப பலன்களையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை 13-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை வக்ர […]
ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைகள் முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். அதிலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை கூடுதல் சிறப்புடையதாகும். தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையை போல் ஆனி மாதத்தில் வரும் அமாவாசையும் சிறப்புடையதாகும். இதை ஆஷாட அமாவாசை என்றும் சொல்லுவதுண்டு. அமாவாசை திதி, ஒரு குறிப்பிட்ட கிழமைகள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து வரும் போது அது அதிக சிறப்புடையதாக சொல்லப்படுகிறது. ஆனி […]