ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்துள்ளது. ஐபிஎல் 2023 தொடரின் பரபரப்பான இறுதிக்கட்ட லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. அதன்படி, பிற்பகல் 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று டெல்லி அணியுடன் சென்னை அணி மோதியது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் சென்னை அணி களம் […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பிளே ஆப் சுற்றும் நுழைய போகும் கடைசி அணி எது? என்று முடிவு செய்யும் 2 இறுதிலீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் அணியை சந்திக்கிறது. மும்பையில் வான் கடையை மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை அணி நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில், களமிறங்குகிறது. அதோடு மட்டுமல்லாமல் அதிக […]
துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை கணேமெட் ஷேக்கன், துப்பாக்கிச்சுடுதல்வீரர் குர்ஜோட் சிங் ஆகியோர் இத்தாலியில் பயிற்சி பெற எம்ஓசி ஒப்புதல் அளித்துள்ளது. துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை கணேமெட் ஷேக்கன், துப்பாக்கிச்சுடுதல் வீரர் குர்ஜோட் சிங் ஆகியோர் இத்தாலியில் பயிற்சி பெற மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்தின் ஒலிம்பிக் செல் இயக்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தின் கீழ் இவர்கள் இருவரும் வெளிநாட்டு பயிற்சியாளர்களான பியரோ […]
ஐபிஎல் தொடரில் முதல் பேட்டிங்கின் அதிக ரன்களில் பெங்களூரு அணியின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முறியடித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டெல்லியின் அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை செய்ய முடிவு செய்து, அதன்படி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களை […]
ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது 16-வது ஐபிஎல் தொடரில் நேற்றி இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 68வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா […]
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12வது முறையாக பிளே ஆஃப்-க்குள் நுழைந்தது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி […]
16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. நாளையுடன் லீக் போட்டிகள் நிறைவடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியும் புல்லிபட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் […]
ஆஸ்திரேலியாவின் 31வது டெஸ்ட் கேப்டனான பிரையன் பூத் தனது 89வது வயதில் இன்று காலமானார். பிரையன் பூத் ஐந்து டெஸ்ட்களில் சதங்களை அடித்துள்ளார். 1960-களின் முற்பகுதி முழுவதும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையில் முக்கிய வீரராக இருந்தார் பிரையன் பூத். மிடில்-ஆர்டர் பேட்டரான பூத், 1962 இல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்தார். இவர் 1,773 டெஸ்ட் ரன்களை எடுத்தார். மேலும் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் ஹாக்கியிலும் ஆஸ்திரேலியாவைப் […]
ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 65ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் குறிப்பாக விராட் கோலி 62 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு சதமடித்த நிலையில் தனது […]