நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பாதி முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 2ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்திலும் உள்ளன. ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடர் மார்ச் 31ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 10 அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக விளையாடிவருகின்றன. இந்த சீசனில் 10 அணிகளும் விர்ச்சுவலாக 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. […]

நடப்பு ஐபிஎல் சீசனில் மீண்டும் ஒருமுறை பந்துவீசுவதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டால், ஸ்டாண்டிங் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டின் 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு போட்டியிலும் தனது பலத்தை நிரூபிக்கும் வகையிலும் கோப்பையை வெல்லும் முனைப்பிலும் வெறித்தனமான ஆட்டத்தை ஆடி வருகின்றன. அந்தவகையில், இந்த சீசனிலாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் ஏழாம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்காக ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இதில் சுப்மன் கில், புஜாரா விராட் கோலி, அஸ்வின், அஜின்கியா ரஹானே, கே எல் ராகுல், கே எஸ் பாரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர்படேல் சர்துல் […]

தல தோனியின் கேப்டன்சியில் ஆடும்போது எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று சென்னை அணி வீரர் அஜிங்க்யா ரஹானே கூறியுள்ளார். ஐபிஎல் 16வது சீசன் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சீசன் தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இதனை வழிநடத்தும் தலைவரான தோனியை பற்றிதான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டுவருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை நிகழ்த்திவருகிறது. இதுமட்டுமின்றி தோனிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், 17 மாதங்களுக்கு பிறகு ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடரை இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி கைப்பற்றியது. அதைதொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 9 அணிகள் பங்கேற்றன. தகுதிச்சுற்று […]

விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் ஜிம்மில் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ் மேனுமான விராட் கோலி மைதானத்திலும் சரி பொது வெளியிலும் சரி எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம். நேற்றைய போட்டியில் கூட ஜேஸ்வால் லெக் சைடு தூக்கி அடித்த […]

கொல்கத்தா ரசிகர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க தான் சென்னை அணி ஜெர்ஸியில் வந்துள்ளனர் என தனது ஓய்வு குறித்து தோனி மீண்டும் பேசியிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நேற்று அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது சென்னை அணி. இதில் டாஸ் வென்ற கொல்கத்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் கான்வே, ராகனே, துபே உள்ளிட்ட 3 வீரர்கள் […]

ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தாவில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த […]

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்திப் சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை என்று கிரிக்கெட் வாரியம் வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்டம்புகளின் விலை குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் பஞ்சாப் வீரர்கள் தடுமாறினாலும் இறுதியில் சாம் கரன், ஹர்ப்ரீத் […]

ரஹானேவின் மரண அடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியை வீழ்த்தி 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 16வது சீசனின் 33வது லீக் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பவுளிங்கை தேர்வு செய்தது. […]