உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. * அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். * உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைஃபாய்டு, மஞ்சள் காமலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். இதற்கான மருத்துவ சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும். * எந்த […]

கடந்த 1992ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட திட்டம் தான், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். ஒவ்வொரு பெண்ணும் தரமான கல்வியைத் தொடரவும், பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகள் பள்ளி சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வியை ஆவது முடிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒற்றைப் பெண் குழந்தை உள்ள குடும்பங்களுக்கு நிலையான வைப்புத் […]

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (HPCL) காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Hindustan Petroleum Corporation Limited (HPCL) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 372 பணியிடம் : இந்தியா முழுவதும் பணியின் பெயர் : Junior Executive (Mechanical), Junior Executive (Civil), Junior […]

இந்திய மக்களின் சேமிப்பில் தங்கம் முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் தான், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஆட்டம் காட்டி வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், போர் பதற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் போன்றவைகளே காரணம். இதற்கிடையே, அமெரிக்க […]

சவுதி அரேபியாவில் உள்ள டர் அல்-ரியாயா என்ற இடம் பெண்களுக்கான ரகசிய சிறையாக உள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த இஸ்லாமிய நாடாக சவுதி அரேபியா அறியப்படுகிறது. முஸ்லிம்களின் இரண்டு புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனா ஆகியவை இங்கு தான் உள்ளன.. மேலும் இந்த நாடு அரச குடும்பம், எண்ணெய் வளம் மற்றும் பெரிய கட்டிடங்களுக்கு பிரபலமானது. வெளியில் இருந்து பார்த்தால், […]

500 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 2016 நவம்பர் 8ஆம் தேதி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பிறகு புதிய ரூ.500 கொண்டு வரப்பட்டது. அதேபோல், ரூ.1,000 நோட்டுக்கு பதில் ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ரூ.2,000 நோட்டு மக்களிடம் புழக்கத்தில் இல்லை. அதை ரிசர்வ் வங்கி திரும்பப் […]

வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் புதுப்பிப்பு செய்யப்படும் வகையில் புதிய ‘ECINET’செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது. இத்தகவல்கள் வழங்க இந்த அமைப்பு உதவுவதோடு, இவ்வாண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இது அமலுக்கு வர உள்ளது. முன்னர் பயன்படுத்தப்பட்ட கைமுறை அறிக்கையிடல் முறைகளுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய செயல்முறை நேர தாமதத்தை […]

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் திருமணச் சான்றிதழலை இணைப்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் திருமணச் சான்றிதழ் அவசியம் என முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, திருமணச் சான்றிதழுக்கு பதிலாக ‘இணைப்பு J” என்ற எளிமையான பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரரின் பெயர், இருப்பிடம், வாழ்க்கை துணையின் பெயர் ஆகிய விவரங்கள் […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும், விடுப்பட்டவர்களை இணைக்கும் நோக்கில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.14 கோடி பேர் பயனடைந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது. தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் […]

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி நேன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக பிலிப்ஸ் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். சால்ட் […]