அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன.. இந்த நிலையில் ஈராக்கின் கோர் அல் ஜுபைர் துறைமுகத்திற்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான சஃபேசியா விஷ்ணு என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலை ஈரானின் “தற்கொலை” படகு தாக்கியது.. இந்த தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மார்ஷல் தீவுகளின் […]

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருவதால் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகின்றது.. இந்த நிலையில் ஓமனில் உள்ள சலாலா துறைமுகத்தில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை ஈரானிய ட்ரோன்கள் குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியே புகை மண்டலம் போல் காட்சியளித்தது.. ஓமன் அரசு தொலைக்காட்சி இந்த தகவலை தெரிவித்துள்ளது.. மேலும் பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு […]

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்ததாக துபாய் அரசு தெரிவித்துள்ளது. புதன்கிழமை துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இரண்டு ட்ரோன்கள் விழுந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தில் இரண்டு கானா நாட்டினர் மற்றும் ஒரு வங்கதேச நாட்டினர் சிறிய அளவில் காயமடைந்துள்ளனர். மேலும் ஒரு […]

தாய்லாந்தில் உள்ள புக்கெட் சர்வதேச விமான விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடுமையாக தரையிறங்கியதால் (Hard Landing) ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடந்தது. மார்ச் 11ஆம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில், Boeing 737 MAX 8 வகை விமானம் ஹைதராபாத் – பூக்கெட் வழித்தடத்தில் பறந்து வந்தபோது ஓடுபாதையில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. VT-BWQ என்ற […]

மத்திய கிழக்கு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் போரின் 12வது நாளில் கடலில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் 16 ஈரான் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதாவது ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளை (Naval Mines) வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானின் 16 படகுகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து […]

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சி படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், போரின் முடிவை […]

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே போர் தொடங்கிய பிறகு, வெளிநாடுகளில் செயல்படும் “ஸ்லீப்பர் செல்” குழுக்களை செயல்படுத்த ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. இதற்காக ஒரு “செயல்பாட்டு சிக்னல்” (operational trigger) அனுப்பியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இடைமறித்த ஒரு குறியாக்கப்பட்ட (encrypted) செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான வான்வழி தாக்குதல்களை […]

இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையி, இந்த போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.. அப்போது “ஈரானுக்கு எதிரான போர் நீண்ட காலம் நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே முடிவடையக்கூடும். ஈரானில் இஸ்லாமிய ஆட்சியை பாதுகாக்கும் போராட்டத்தை மேற்பார்வை செய்ய புதிய கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட உயர்ந்த மதத் தலைவரை தேர்வு செய்திருந்தாலும், இந்தப் போர் குறுகிய காலமே நீடிக்கலாம் என்று கூறினார். ஈரான் […]

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போர் தொடங்கி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், பிப்ரவரி 7 அன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஈரானின் முக்கிய எரிபொருள் நிலையங்கள் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது அதிரடித் தாக்குதலை நடத்தின. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும். ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள மக்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் […]

சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தை ஏவுகணை போன்ற இராணுவ குண்டு தாக்கிய சம்பவத்தில் எந்த இந்தியரும் உயிரிழக்கவில்லை என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நடந்த அந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒரு இந்தியர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தூதரகம் கூறியுள்ளது. “நேற்று மாலை அல்-கர்ஜ் பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் எந்த இந்தியரும் […]