அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான பேபால்(PayPal), இந்தியாவின் UPI-ஐயுடன் கைகோர்த்துள்ளது. இதன்மூலம், இந்தியர்கள் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்வதற்கு யுபிஐ-யை பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம். இந்தியாவில்,மளிகை, உள்ளிட்ட பொருட்களுக்கு UPI மூலம் பணம் செலுத்துவது போல, எல்லைகளைக் கடந்து வெளிநாட்டிலும் இதை செயல்படுத்தும் நோக்கத்தில், உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான PayPal, நேற்று புதன்கிழமை, “PayPal World” எனும் உலகளாவிய பண பரிமாற்ற தளத்தை அறிமுகம் செய்தது. […]

26/11 தாக்குதலின் முக்கிய குற்றவாளியும், நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவருமான லஷ்கர் பயங்கரவாதி அப்துல் அஜீஸ் பாகிஸ்தான் மருத்துவமனையில் உயிரிழந்தார். 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்த லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாதி அப்துல் அஜீஸ், பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மரணமடைந்தார். மே 6 அன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரின் போது அவர் காயமடைந்ததாக தகவல்கள் […]

அமெரிக்காவில் தாக்குதல், வீட்டு வன்முறை அல்லது பிற கடுமையான குற்றங்களைச் செய்வதற்கு எதிராக வெளிநாட்டினருக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுபோன்ற கடுமையான குற்றங்கள் உடனடியாக விசா ரத்து செய்யப்படலாம் மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான தகுதியை பாதிக்கலாம் என்று எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், அமெரிக்க விசா என்பது “ஒரு சலுகை, ஒரு உரிமை அல்ல” என்றும் மேலும் குற்றச் செயல்கள் […]

எளிதில் யூகிக்கக்கூடிய எளிதான அல்லது பலவீனமான பாஸ்வேர்டு, பிரிட்டனின் பழமையான நிறுவனங்களில் ஒன்றின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.. இதனால் 700 க்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் தவித்தனர். என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்.. 158 ஆண்டுகள் பழமையான போக்குவரத்து நிறுவனமான KNP லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் மீது ரான்சம்வேர் (Ransomware) சைபர் தாக்குதல் நடந்துள்ளது.. ஹேக்கர்கள் பலவீனமான பாஸ்வேர்டை உடைத்து நிறுவனத்தின் முழுமையான நெட்வொர்க்கை அணுகியதாக கூறப்படுகிறது.. மேலும் நிறுவனத்தின் தரவை குறியாக்கம் செய்து, […]

21 ஆம் நூற்றாண்டின் மிகவும் அசாதாரண வானியல் நிகழ்வுகளில் ஒன்றான மகா வட ஆப்பிரிக்க கிரகணத்தை உலகம் காண உள்ளது, இது ஆறு நிமிடங்கள் 23 வினாடிகள் வரை இருளில் மூழ்கடிக்கும் முழு சூரிய கிரகணமாகும். இது சாதாரண கிரகணம் அல்ல; 1991 மற்றும் 2114 க்கு இடையில் நிலத்திலிருந்து தெரியும் மிக நீண்ட முழு சூரிய கிரகணமாக இது இருக்கும். பெரும்பாலான முழு சூரிய கிரகணங்கள் ஒரு சில […]

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கையில் விலங்கு போட்டு FBI அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவை, டிரம்ப் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வீடியோ, ஒபாமா டிரம்புடன் பேசிக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதை காட்டுகிறது. […]

வங்கதேசத்தின் வட டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மீது வங்கதேச போர் விமானம் விபத்துக்குள்ளானது. உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி மீது விமானம் பிற்பகல் 1:30 மணியளவில் சீனாவில் தயாரிக்கப்பட்ட F-7 விமானம் மோதியது.. இந்த விபத்தின் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த விமான விபத்தை நேரில் பார்த்த, ஃபஹிம் ஹொசைன் என்ற […]