சென்னை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த மழை…! 20-ம் தேதி வரை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு…!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டன இந்த நிலையில் வானிலை மையம் மழைக்கான எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வரும் 20-ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் 20-ம் தேதி வரை கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை. வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம்.

Vignesh

Next Post

உலகின் முதல் ரோபோ வழக்கறிஞர்!... செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கம்!... லண்டனை சேர்ந்த நிறுவனம் புதிய முயற்சி!

Fri Mar 17 , 2023
லண்டனைச் சேர்ந்த நாட் பே என்ற சட்ட ஆலோசனை நிறுவனம் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ரோபோ வழக்கறிஞர் உருவாக்கி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதாவது, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகள் மற்றும் உணவகங்களில் ஆர்டர் எடுப்பது முதல் சப்ளை செய்வது வரை அனைத்திலும் ரோபோ வந்துவிட்டது. ஏனென்றால், மனிதர்கள் […]

You May Like