விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற சென்னை மாணவி…..! மதுரையில் திடீர் மரணம் காரணம் என்ன…..?

திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் அபிநந்தனா 15 தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் விருதுநகரில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார்.

அந்த அணியினர் போட்டியில் பங்கேற்பதற்காக தொடர்வண்டி மூலமாக நேற்று காலை சென்னை திரும்ப திட்டமிட்டது. வந்தனர் விருதுநகரில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து தொடர்வண்டி நிலையத்திற்கு நடந்து சென்றனர். ரயில் நிலையம் முன்பு திடீரென்று அபிநந்தனா மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திலகர் திடல் காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் காவல்துறை தரப்பில் இது தொடர்பாக தெரிவித்ததாவது, மாணவிக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் மாத்திரைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்திருக்கிறார். ஆனால் அவருடைய இறப்புக்கான காரணம் என்ன? என்பது வேறு பரிசோதனை அறிக்கை வந்த வந்த பின்னர் தான் தெரியவரும். தொடர்ந்து இது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Next Post

ஜி-20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழு...! இரண்டாவது கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்...!

Tue May 23 , 2023
ஜி-20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழுவின் இரண்டாவது கூட்டம் மும்பையில் இன்று முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மும்பையில் அடுத்த மூன்று நாட்களில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் நான்கு தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறவுள்ளன. 2023 மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளின் காந்தி நகரில் நடைபெற்ற முதல் பேரிடர் ஆபத்து குறைப்பு பணிக்குழுவின் தொடர்ச்சியாக, […]

You May Like