டெல்லி சென்ற முதல்வர் விஜய்க்கு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை உடன் வரவேற்பு..!

cm vijay in delhi

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம் செய்துள்ளார்.. தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் புறப்பட்ட முதல்வர் விஜய் இன்று மதியம் டெல்லி சென்றடைந்தார்..


டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.. முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.. அந்த மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார்..

இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விஜய் சந்திக்கிறார்.. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடி உடன் நடைபெற இருக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.. இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை, பி.எம்.ஸ்ரீ திட்டம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்த விரிவான மனுவை முதல்வர் விஜய் பிரதமரிடம் வழங்க உள்ளார்.. இதை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாரமன் ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்..

இன்றிரவு டெல்லியில் தங்கும் முதல்வர் விஜய் நாளை காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரை சந்திக்க உள்ளார்.. அதன்பின்னர் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.. இந்த சந்திப்பு முடிந்ததும் நாளை முதல்வர் விஜய் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது..

Read More : முடிவுக்கு வந்த அதிமுக உட்கட்சி பூசல்..! மீண்டும் இபிஎஸ் உடன் இணைந்த எஸ்.பி.வேலுமணி தரப்பு.. ஆனால் முரண்டு பிடிக்கும் சி.வி. சண்முகம்..!

RUPA

Next Post

நாட்டு மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. வெப்ப அலை வீசி வரும் நிலையில் பிரதமர் மோடி அட்வைஸ்..!

Wed May 27 , 2026
நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களை வலியுறுத்தினார். பல மாநிலங்கள் கடுமையான கோடை வெப்பத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், வெளியில் செல்லும்போது தண்ணீர் எடுத்துச் செல்லவும், தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யவும் அவர் அறிவுறுத்தினார். தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்ட அவர், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளியில் வேலை செய்பவர்கள் […]
heat wave pm modi

You May Like