தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.. எனினும் அவர் 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக அவர் தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் முதல்வர் விஜய் நாளை மறுநாள் திருச்சி செல்லவிருக்கிறார்.. தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விஜய் திருச்சி செல்ல உள்ளார்.. திருச்சி புனித வளனார் கல்லூரி வளாகத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் விஜய் வாக்காளார்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்ற உள்ளார்..
முதல்வரான பின்னர் பதவியேற்ற விழாவில் மட்டுமே விஜய் பேசியிருந்தார்.. அதன்பின்னர் எந்த நிகழ்ச்சியிலும் விஜய் பேசவில்லை.. மேலும் செய்தியாளர்களை சந்திக்கவும் இல்லை.. திருச்சியில் நடைபெறும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் விஜய் உரையாற்ற உள்ளார்..
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதலே பல்வேறு பிரச்சனைகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வருகின்றன.. குறிப்பாக குதிரை பேர அரசியல், மின்வெட்டு பிரச்சனை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பேருந்து பற்றாக்குறை, தவெகவினர் அரசு அலுவலகங்களில் அத்துமீறல் என பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தவெக அரசை கடுமையாக சாடி வருகின்றனர்..
ஆனாலும் எந்த பிரச்சனைகள் குறித்து விஜய் பேசவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.. மேலும் சமீபத்தில் பிரதமரை சந்திக்க டெல்லி சென்ற போது கூட செய்தியாளர்களை புறக்கணித்துவிட்டு விஜய் கிளம்பிவிட்டார்.. தமிழக முதல்வர் டெல்லி செல்லும் போது செய்தியாளர்களை சந்திப்பது மரபாக இருந்து வந்தது.. ஆனால் அந்த மரபை விஜய் உடைத்துவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது..
கட்சி தொடங்கியதில் இருந்தே விஜய் செய்தியாளர்களை தவிர்த்த நிலையில் முதல்வரான பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுவது கட்டாயம் என்ற விமர்சனமும் எழுந்தது.. இந்த சூழலில், திருச்சியில் விஜய் இதுகுறித்தெல்லாம் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
Read More : “அந்த கத்தியை எடுடா..” அடாவடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகி.. கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்..!



