Breaking : முதல்வர் விஜய் விரைவில் டெல்லி பயணம்..! என்ன காரணம்..?

cm vijay n 1

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.


இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால் தவெக ஆட்சி அமைத்தது. மேலும் சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றார்.. தவெகவுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்ததால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தப்பியது.

இதனிடையே ஆட்சியமைக்க ஆதரவு வழங்கிய காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் 1952-க்கு பின்னர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தலா 1 அமைச்சர் என கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் விஜய் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. வரும் 25-ம் தேதிக்கு பின்னர் முதல்வர் ஜோசப் விஜய் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ளடாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, பாமகவின் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : Flash : அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.. யாருக்கு எந்த துறை..?

English Summary

Reports have emerged that Chief Minister Vijay is set to visit Delhi soon.

RUPA

Next Post

கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞரை கவ்வி சென்ற முதலை..! மாமியாரின் இறுதிச்சடங்கில் சோகம்..

Fri May 22 , 2026
Tragedy at mother-in-law's funeral.. A crocodile grabbed a young man in the blink of an eye..!
crocodile

You May Like