fbpx

விரைவில் தந்தையாகவிருக்கும் இயக்குனர் அட்லி நடிகர் விஜய் கொடுத்த 2 பரிசுகள்! அதில் 2வது பரிசு என்ன தெரியுமா?

நடிகர் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்து சூப்பர் ஹிட் ஆன ராஜா, ராணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு தன்னை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் அட்லி.
அதன் பிறகு இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்கள் இயக்கி இருக்கிறார். அதேபோல இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பிறகு தனியாக ஒரு குறும்படத்தை இயக்கி விட்டு அதன் பின்னர் தான் தமிழக திரைத்துறைக்கு வந்திருக்கிறார் இயக்குனர் அட்லி.

இந்த நிலையில், இயக்குனர் அட்லி, பிரியா ஜோடி 8 வருடங்களுக்கு பிறகு தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஒரு மகிழ்ச்சியான செய்தியை சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார்கள்.

இந்த நிலையில், நேற்று மிகப் பிரமாண்டமான முறையில் அட்லியின் மனைவி பிரியாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவிற்கு நடிகர் விஜயும் வருகை தந்திருந்தார். அதோடு அவர் அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிக்கு பரிசாகவும் வழங்கினார். இந்த ஓவியப் பரிசுடன் நிறுத்தாமல் 400 கோடி ரூபாய் மதிப்பிலான மற்றொரு பரிசையும் வழங்கியுள்ளார் நடிகர் விஜய். ஆம் விஜய் நடிக்கவிருக்கும் அவருடைய 68வது திரைப்படத்தை அட்லிக்கு கொடுத்திருக்கிறாராம் நடிகர் விஜய்.

சன் பிக்சர்ஸ், விஜய், அட்லி கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த படத்திற்காக ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

Next Post

அடேங்கப்பா..! இது முடியவே முடியாதா? இயக்குனரை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

Tue Dec 20 , 2022
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா உள்ளிட்ட மெகா தொடர்களின் இயக்குனர் டேவிட் இவர் முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மெகா தொடரை தான் இயக்கி வந்தார். அதன் பிறகு பாரதிகண்ணம்மா என்ற மெகா தொடரை இயக்க தொடங்கினார். பாரதி கண்ணம்மாவும் சரி, பாண்டியன் ஸ்டோர்ஸும் சரி ஆரம்பத்தில் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றனர். இந்த 2 தொடர்களால் அந்த டிவியின் டிஆர்பி எக்கச்சக்கமாக […]

You May Like