தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…!

tvk vijay 2025 1

தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.


சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்; 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் சீட்கள் வேண்டும் என்று கட்சியினர் தங்களுடைய ஆசையை சொல்கிறார்கள். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாது. கட்சியினர் கருத்துகளை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவிப்பேன். ஆனால், முடிவு எடுப்பது காங்கிரஸ் தலைமையும், பொறுப்பாளர்களும் தான். தவெக-வுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி மறைமுகமாக எதுவும் பேசவில்லை. நாங்கள் எதற்கு மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கு, என்ன தேவை இருக்கிறது ? எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் எந்த மாற்றமும் வராது.

தமிழகத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இல்லை. எங்களை விமர்சிக்க ஒன்றும் இல்லாததால், தவெக தலைவர் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை. விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர் என்ன பேசுகிறார் என தெரியும். விஜய் கட்சிக்கு கூட்டம் நடத்த பிரச்சாரம் செய்ய அரசு அனுமதி தர மறுப்பதாக கூறுகிறீர்கள். காங்கிரஸ் கட்சிக்கு மட்டும், அரசு உடனே அனுமதி தருகிறதா..?

ஒவ்வொரு போராட்டத்துக்கும் போராடிதான் அனுமதி வாங்க வேண்டியதாக இருக்கிறது. இந்த நான்கரை ஆண்டுகளில், போராட்டம் நடத்தியபோது, என்னை கைது செய்து உள்ளார்கள். அதற்காக நாங்கள் ‘காவல் துறை கைது செய்து விட்டது. அரசு நெருக்கடி தருகிறது’ என்று சொல்ல முடியுமா? அவர்கள் வேலையை, அவர்கள் செய்கிறார்கள் என்றார்.

Vignesh

Next Post

சிவன் கோயிலுக்கு செல்லும்போதும் திரும்பி வரும்போதும் இந்த விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க..!! பக்தர்களே கவனம்..!!

Wed Sep 24 , 2025
கோயிலுக்கு செல்வது, நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி, மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, முழுமுதற் கடவுளான விநாயகரை தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொண்டு வணங்க வேண்டும். பெருமாள் கோயிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை தரிசித்த பின்னரே பெருமாளை வணங்க வேண்டும். ஆனால், சிவன் கோயிலுக்கு செல்லும் முறை சற்று வேறுபட்டது. சிவன் கோயிலில் […]
Sivan 2025

You May Like