அதிர்ச்சி.! அதிகமாக வெந்நீர் குடிப்பதால் உடலில் இந்த பாதிப்பு ஏற்படுமா.!?

பொதுவாக உடலில் சாதாரண சளி காய்ச்சல் முதல் பல நோய்களும் வந்து விட்டால் மருத்துவர்கள் முதல் பலரும் அறிவுறுத்துவது தண்ணீரை சுட வைத்து வெதுவெதுப்பாக அருந்த வேண்டும் என்று தான். ஆனால் இவ்வாறு வெந்நீர் அதிகமாக குடிப்பதால் உடலில் ஒரு சில பாதிப்புகள் உண்டாகும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

நம்மில் பலருக்கும் தினமும் வெந்நீர் குடிப்பது ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது. இது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. குறிப்பாக செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வெந்நீர் அருமருந்தாக இருந்து வருகிறது. வயிற்றில் அளவுக்கு அதிகமாக அமிலம் உருவாகி நெஞ்சு பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும் போது சுடு தண்ணீர் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள அமிலங்களை உடனடியாக கட்டுப்படுத்துகிறது.

குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டும் போது அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் இதை சுடவைத்து வெதுவெதுப்பாக குடித்தால் அந்த நேரத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சனையும் தீரும், கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், தாய்ப்பாலும் அதிகமாக ஊறும். இவ்வாறு சுடுதண்ணீர்  குடிப்பதால் அளவுக்கு அதிகமாக நன்மைகள் இருந்து வருகின்றன.

ஆனால் அளவுக்கு அதிகமாக சுடுதண்ணீர் குடிக்கும் போது கிட்னி மற்றும் சிறுநீரகம் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் மூளைக்கு செல்லும் நரம்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனையும் ஏற்படும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

Baskar

Next Post

தமிழக மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!… தீவிரமடைந்த பறவைக்காய்ச்சல் பாதிப்பு!

Sun Feb 18 , 2024
ஆந்திராவின் நெல்லூரில் கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களான 5 மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லுார் பகுதியில் உள்ள, கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த, 10 நாட்களில், 10,000 கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளன. எனவே தமிழகத்தில், ‘எச்5என்1’ என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, […]

You May Like