சென்னை, திருவொற்றியூர் தாங்கல் பீர்பயில்வான் தர்கா ரோட்டை சேர்ந்தவர் சுல்தான். இவருக்கு ஹசீனா என்ற மனைவியும், 15 வயதான ஒரு மகள் மற்றும் 12 வயதான ஒரு மகளும் உள்ளனர். சுல்தான் அருகே உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது இரு மகள்களும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில், பாதியிலே இருவரும் படிப்பை நிறுத்தி விட்டனர்.
இதையடுத்து, இருவரும் தனது அம்மாவுடன் வீட்டை கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான ஆட்டோ டிரைவர் முகமது ரபிக் என்பவரும், தனியார் வங்கி ஊழியரான 23 வயதான அப்துல் கலாம் என்பவரும் இரு மகள்களை காதலிப்பதாக கூறி பழகியுள்ளனர்.
இவர்களின் காதலுக்கு தாய் ஹசீனா உடந்தையாக இருந்துள்ளார். மேலும், தனது மகள்களின் காதலர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட தாய் ஹசீனா, தனது கணவருக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார். மேலும், தனது மகள்களின் காதலர்களை இரவில் வீட்டிற்கு வரவழைத்து தனது மகள்களுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது மனைவியின் இந்த செயல் குறித்து, சுல்தானுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுல்தான் சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிகளின் தாய் மற்றும் முகமது ரபிக், அப்துல் கலாம் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.