அதிமுகவில் தொடர்ந்து நிலவி வரும் உள்கட்சி பூசல் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் அவர் சென்னைக்கு வந்தபோது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தார் என்ற செய்தி பரவியது. அதேபோல், பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்தித்தார் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகின.
ஆனால், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்,
“நான் சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் என் மனைவியையே மட்டும் சந்தித்தேன். தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு குறித்து பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் வதந்தி மட்டுமே. நான் அதிமுகவில் 45 ஆண்டுகளாக விசுவாசமாக பணியாற்றி வருகிறேன். எனவே, என்னைச் சுற்றி வதந்தி பரப்புவதை இனியாவது நிறுத்த வேண்டும்,”
என்று தெளிவுபடுத்தினார்.
அத்துடன், “எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அந்த கோரிக்கைக்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நல்ல செயல்பாடுகளுக்குத் தொண்டர்களும், பொதுமக்களும் ஊக்கமளிக்க வேண்டும்; வதந்திகளை பரப்புவது துன்பம் அளிக்கிறது” எனவும் அவர் வலியுறுத்தினார். இதனிடையே, செங்கோட்டையனும், எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்றுவந்ததை அடுத்து, தினகரன் – ஓபிஎஸ் சந்திப்பு வதந்திகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Read more: ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு.. 385 காலிப்பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது..?



