தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நாளை மறு நாள் நடைபெற உள்ளது.. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என திமுகவும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன..
புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும், தவெகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.. தமிழ்நாட்டில் கோடை வெயிலை தாண்டி தலைவர்களின் பிரச்சாரம் அனல் பறந்தது..
அதன்படி கடந்த 20 நாட்களாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.. 6 மணிக்கு மேல் யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது.. முதல்வர் ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.. அதே போல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும், சீமான் காரைக்குடியிலும் நிறைவு செய்கிறார்..
தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.. மேலும் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.. எந்த வித தேர்தல் கருத்துக்கணிப்பும் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியிடக் கூடாது..
அதே போல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் மேற்கு வங்க இறுதிக்கட்ட தேர்தல் முடிந்த பின்னர் வரும் 29-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் தான் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது..
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த உடன் அமலுக்கு வரும் விதிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டிருந்தார்..
இன்று மாலை 6 மணி முதல் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.. இன்று அதாவது 21.04.2023 மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்
தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ அல்லது ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது..
எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காடிச், எஃப்.எம், ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், எக்ஸ் போன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
பொதுமக்களை ஈர்க்கும் வகையில் , எந்த ஒரு இசை நிகழ்ச்சி அல்லது பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் பொதுமக்களிடம் எந்த தேர்தல் விவகாரத்தையும் எந்த ஒரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126-ன் படி 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கபப்டும்.
தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் அந்த தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் நாளை மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
கல்யாண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியூர் ஆட்கள் தங்கி உள்ளார்களா என்பது கண்டறியப்படும்
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் செயல்திறனற்றதாகிவிடும்.
வாக்காளைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும் வாக்கு சாவடிகளில் இருந்து அழைத்து செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாலரும் அனுமதிக்கக்கூடாது..
இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளர்கள் / அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்கு சாவடியில் இருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம்.. தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.
Read More : எடப்பாடியை தவிர வேறு தொகுதியில் நின்று உங்களால் ஜெயித்து காட்ட முடியுமா? இபிஎஸ்-க்கு விஜய் சவால்..!



