பயமா? அது எங்களுக்கு இல்ல..!! திமுகவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் அருண்ராஜ்..!!

Minister Arunraj 2026

மாநில உரிமைகள் மற்றும் கொள்கை விஷயங்களில் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் தமிழக அரசும், முதலமைச்சரும் ஒருபோதும் பணியமாட்டார்கள் என்று அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாநில சுயாட்சி, கொள்கைவாதம் மற்றும் சமூக நீதி குறித்து திமுக பேசுவது முரண்பாடாக உள்ளது. கடந்த கால ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் விவகாரங்கள் காரணமாகவே, வேறு வழியின்றி பாஜகவின் பிடியில் அவர்கள் விழும் சூழல் உருவானது. கொள்கை ரீதியான அணுகுமுறை இல்லாமல், சுயநலத்திற்காகவும் குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காகவும் திமுக செயல்படுவது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, எந்தவொரு அரசியல் அழுத்தத்திற்கும் பயந்தோ அல்லது பணிந்தோ செல்லும் நிலையில் இந்த அரசு இல்லை என்றார். காவிரி விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விரிவாகப் பேசியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், காவிரி விவகாரத்திற்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை என்ற ஒரே காரணத்தை கூறி, தொகுதி மறுவரையறை தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தது தவறான அணுகுமுறை என்றார்.

தொகுதி மறுவரையறை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரம் என்பதால், அதன் தீவிர உணர்ந்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

Read More : இபிஎஸ்-க்கு எதிராக பாய்ச்சல்..!! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

Next Post

கணவன்-மனைவி தகராறு.. ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி!

Sun Aug 9 , 2026
பெங்களூரு அருகே இளம்பெண் ஒருவர் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவி செல்போனில் ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டதாகவும், கணவருக்கு உணவு சமைத்து கொடுக்கவில்லை என்றும், மேலும் தாம்பத்திய வாழ்க்கைக்கும் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறி ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கும்பலகோடு போலீஸ் […]
WhatsApp Image 2026 08 09 at 3.30.21 PM

You May Like