தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை விவாதங்களின் போது, ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடையே காரசாரமான அரசியல் விவாதங்களும் வாக்குவாதங்களும் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது. காலை 9:30 மணிக்கு தொடங்கும் அவையின் நேரலை காட்சிகள் பல்வேறு யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
அவை நடவடிக்கைகளின் போது உறுப்பினர்கள் பேசும் சர்ச்சைக்குரிய அல்லது வரம்பு மீறிய வார்த்தைகளை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டாலும், நேரடி ஒளிபரப்பின் காரணமாக அந்தப் பகுதிகள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ மற்றும் சிறு வீடியோக்களாக வெளியாகி பொதுவெளியில் வீண் சலசலப்புகளை உருவாக்குகின்றன.
இதற்கு தீர்வு காணும் வகையில், சபாநாயகரால் நீக்கப்படும் கருத்துகள் நேரலையிலும் இடம் பெறாமல் தடுக்கும் நோக்கில் ஒளிபரப்பில் 15 நிமிடங்கள் வரை காலதாமதம் செய்யும் சோதனை முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய நடைமுறை நடப்பு வாரத்திலேயே அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக சட்டசபை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : BIG BREAKING | செப்.1ம் தேதி மேட்டூர் அணை திறப்பு..!! தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!



