சட்டசபைக்கு வராத மதிமுக MLA-க்கள்.. நம்பிக்கை வாக்கெடுப்பு புறக்கணிப்பு..! பின்னணி என்ன..?

vijay vaiko

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தன. அதோடு, அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ காமராஜ் மற்றும் அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி ஆதரவு அணியும் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.


மறுபுறம், பாமக இந்த வாக்கெடுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. பாஜக நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தேமுதிக, மமக, மஜக, கொமதேக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணி ஆகியவை நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

இதற்கிடையில் திமுக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளது. மேலும் மதிமுக எம்.எல்.ஏக்களும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் வெற்றி பெற்ற சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் மற்றும் கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோர் அவைக்கு வராததால், அவர்களது இருக்கைகள் காலியாக இருந்தது அவையில் கவனத்தை ஈர்த்தது.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலையில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாடும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் தவெகவுக்கு 144 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 22 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் 5 பேர் நடுநிலை வகித்துள்ளனர். அதன்படி தவெக 144 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பெற்று ஆட்சியை தொடர்கிறது.

Read more: தவெகவுக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு.. அவையில் எழுந்து நின்று இபிஎஸ் தரப்பு கூச்சல்..!

English Summary

Why did the MDMK MLAs who did not come to the assembly boycott the trust vote?

Next Post

"நாங்களே சொல்றோம்.. இது சிறுபான்மை அரசு தான்.. ஆனால்.." நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் CM விஜய் பேச்சு..!

Wed May 13 , 2026
நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்க வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 பேரும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22 பேரும், நடுநிலை வகிப்பதாக 5 பேரும் தெரிவித்தனர்.. இதனால் முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.. தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் விஜய் ” முதலில் நம்பிக்கை தீர்மானத்தை, மக்களுக்கான இந்த ஆட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்த […]
vijay 1 1

You May Like