உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், கணவனைக் கொலை செய்து விபத்து போல காட்ட முயன்ற மனைவியும், அவரது காதலனும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ராஜபரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ்வர் ரௌனியர் (26). இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பைக்கில் வீட்டை விட்டு புறப்பட்ட நிலையில் நீண்ட நேரம் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை கேசவ் ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நிச்லாவ்ல்–சிந்துரி சாலையில் நாகேஷ்வர் சலடமாக மீட்கப்பட்டார்.
முதலில் இது விபத்தாகவே கருதப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் உடலில் பல காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகேஷ்வரின் மனைவி நேஹா மற்றும் அவரது கள்ள காதலன் ஜிதேந்திரா சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் மது கொடுத்து திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தகவலின்படி, நேஹா – நாகேஷ்வர் காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருந்தனர். இவர்களுக்கு ஆத்விக் என்ற மகன் உள்ளார். இதனிடையே நேஹாவிற்கு ஜிதேந்திரா என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த உறவால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டுள்ளது.
இதனால் காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி கொலை நடந்த நாளில், நேஹா கணவனை பீர் குடிக்க அழைத்துச் சென்றார். மது அருந்திய பின் தூங்கிய கணவனின் கால்களை கட்டி, ஜிதேந்திரா உடன் சேர்ந்து முதலில் கழுத்தை நெரித்து, பின்னர் குத்திக்கொன்றனர். கொலைக்குப் பிறகு சடலத்தின் உடைகளை அகற்றி, பைக்கில் உட்கார வைத்துக் கொண்டு 25 கிலோமீட்டர் தூரத்தில் சாலையோரம் வீசியுள்ளனர். ஜெய்திபூர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
Read more: தினமும் ரூ.100 சேமித்தால் லட்சங்களில் ரிட்டன்ஸ்.. இந்த போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம் பற்றி தெரியுமா..?