கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ப்ரீத்தி (28). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில், ‘Stranger” உடன் உறவு கொள்ள வேண்டும் என வினோதமான ஆசை பிரீத்திக்கு எழுந்துள்ளது. அப்போதுதான் புனித் என்ற இளைஞன் பேஸ்புக் -ல் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக செல்போனில் பேசி வந்த நிலையில், நேரில் சந்திக்க முடிவு எடுத்துள்ளனர்.
திட்டமிட்டபடி இருவரும் நேரில் சந்தித்து பல இடங்களை சுற்றிபார்த்தனர். அதன் பின்னர் இருவரும் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் ப்ரீத்தி அதற்கு பிறகும் அந்த உறவை தொடர விருப்பம் காட்டியுள்ளார். ஆனால் புனித் தயங்கியுள்ளார்.
ப்ரீத்தி வற்புறுத்தியதை தொடர்ந்து இருவரும் மீண்டும் சந்தித்துள்ளனர். புனித்தை, கட்டேரகட்டா என்ற காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற ப்ரீத்தி இந்த மாதிரியான காட்டு பகுதியில் உறவுகொள்ள வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு புனித் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதில் ஆத்திரமடைந்த புனித் ப்ரீத்தியின் தலையில் அடித்துள்ளார். பின்னர் ஒரு கல்லை அவர் தலையில் போட்டு அவரை கொன்றுள்ளார்.
பின்னர் அவரது உடலை கரோட்டி கிராமத்திற்கு கொண்டு சென்று, தனது நிலத்தில் புதைத்ததாக கூறப்படுகிறது. மனைவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ப்ரீத்தியின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
Read more: உங்க ஆள்காட்டி விரலில் மச்சம் உள்ளதா?. என்ன பலன்கள் தெரியுமா?.



