தலைவலி பலவற்றால் ஏற்படுகிறது. அதிலும் ஒற்றை தலைவலியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலை பார்ப்பது, செல்போன் பார்ப்பது மற்றும் காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் ஆகியவற்றில் வேலை செய்வதனாலும் தலைவலி ஏற்படுகிறது.
இது மட்டும் அல்ல உடலில் ஏற்படும் அதிக சூட்டினாலும் ஏற்படுகிறது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று இப்பதிவின் மூலம் காணலாம்.
முதலில் இஞ்சியினை எடுத்துக் கொள்வது சிறந்த பலன் கிடைக்கும். இஞ்சியில் நார்ச்சத்துக்கள், நீர்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் சி ,விட்டமின் பி12, ஆகியவை இருக்கின்றது. மேலும் பொட்டாசியம், கால்சியம் , சோடியம், இரும்புச்சத்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை போன்ற அனைத்தும் இஞ்சியில் உள்ளது.
இஞ்சியை தோலுடன் சேர்த்து நன்கு சீவிக் கொண்டு, அதனை நன்கு வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். அத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் முற்றிலும் குணமாகும்.
இதனை தொடர்ந்தும் தலைவலி நிற்காமல் இருந்தால் இஞ்சியை நன்கு அரைத்து அதனை தலையில் பத்து போன்று போட வேண்டும். முக்கியமாக தலைவலி ஏற்படும் ஆரம்ப கட்டத்திலேயே இதனை சரி செய்து விட்டால் கண் பிரச்சனைகள் சரியாகும்.