Rain: வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை!… மேற்கூரை இடிந்து விழுந்ததால் கவுகாத்தி விமான நிலையத்தில் பரபரப்பு!

Rain: அசாமில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, விமான நிலையத்தில் வெள்ள நீர் நிரம்பி வழிந்தது. இதனால், விமான நிலை மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வடமாநிலமான அசாமில் திடீர் கனமழை மற்றும் சூரை காற்றினால் கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது, இதனால் விமானங்களின் புறப்பாடு தாமதமானது. மேலும் விமான முனையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிகாரிகள் ஆறு விமானங்களை வேறு இடங்களுக்கு திருப்பிவிட்டனர். விமான நிலைய முனையத்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர்.

இந்நிலையில் புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக விமானநிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Readmore: Modi: தேர்தல் பத்திர விவகாரம்!… பிரதமர் மோடியின் விளக்கமும்!… சரமாரி கேள்வியும்!

Kokila

Next Post

Alert: இது போன்ற நம்பரில் கால் வந்தால் சைபர் கிரைம் ஹெல்ப் லைனுக்கு புகார் செய்ய வேண்டும்...!

Mon Apr 1 , 2024
தொலைத் தொடர்பு துறையினர் என்ற பெயரில்,குடிமக்களுக்கு வரும் அழைப்புகளில் அவர்களின் செல்பேசி எண்கள் அனைத்தும் துண்டிக்கப்படும் அல்லது அவர்களின் செல்பேசி எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அழைப்பாளர்கள் அச்சுறுத்துகின்றனர் என்பது தொடர்பாக தகவல்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) குடிமக்களுக்கு ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அரசு அலுவலர்கள் என்று ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்ற வெளிநாட்டு செல்பேசி எண்களிலிருந்து (+92-xxxxx) வரும் வாட்ஸ்அப் அழைப்புகள் குறித்தும் தொலைத் […]

You May Like