மனிதன் மனிதனாக இல்லாமல் மிருகமாக வாழத் தொடங்கியதற்கு முக்கிய காரணமே செல்போன் தான். ஆம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது ஒருவகையில் நல்லது என்றாலும், மற்றொரு வகையில் இந்த செல்போனால் பெரும் பேரழிவுகளும் நடந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களால் பல குடும்பங்கள் சீரழிந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக தற்போது கோவை மாவட்டத்தில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
கோவை-பாலக்காடு சாலையில் மேற்கு புறவழிச்சாலை பிரியும் இடத்தில் மஞ்சப்பள்ளம் என்ற காட்டுப்பகுதி ஒன்று உள்ளது. அந்த காட்டுப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த பெண் 25 வயதான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பர்ஷா என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அந்த பெண் மூச்சுத் திணறடித்து கொலை செய்யப்பட்டதை அறிந்த போலீசார், அவரை கொலை செய்தவர் யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், போலீசாருக்கு இருந்த ஒரே தடயம் பர்ஷாவின் கையில் பச்சை குத்தப்பட்டு இருந்தது தான். விசாரணையில் 23 வயதான ஜெகன் பிரதான் என்பவர் பர்ஷாவை காதலித்து திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. கோவையில் தங்கி கட்டுமான வேலை செய்து வந்த அவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது மனைவியை கொன்று விட்டு தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெகன் பிரதான் பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்ததில் அவர் வடமாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு சென்று ஜெகன் பிரதானை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர், கடந்த 2023-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் தானும் பர்ஷாவும் காதலித்து, ஒடிசாவில் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
திருமணத்துக்கு பிறகு, கணவன் மனைவி இருவரும் கோவை வந்து பல்வேறு இடங்களில் கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பர்ஷா இன்ஸ்டாகிராமில் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், ஜெகன்பிரதான் தனது மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், பர்ஷா தனது ஆண் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நிர்வாண வீடியோக்கள் அனுப்பி உள்ளார்.
அது மட்டும் இல்லாமல், வீடியோ காலில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக பேசி வந்துள்ளார். இதனால் “நீ செல்போன் பயன்படுத்த கூடாது” என்று தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் பர்ஷா, வேலை பார்க்கும் சக தொழிலாளர்களின் செல்போன்களை வாங்கி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று, வேலை தேடி மஞ்சப்பள்ளம் என்ற இடத்தில் ரோட்டில் நடந்து சென்ற போது பர்ஷாவை ஜெகன் பிரதான் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.
அதற்கு பர்ஷா, ரோட்டிலேயே உல்லாசத்திற்கு அழைக்கிறாயா? என அவர் மறுத்துவிட்டார். உன் நண்பர்களுக்கு மட்டும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுவாயா? என்னிடம் உல்லாசமாக இருக்கமாட்டாயா என இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் பர்ஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் அவரை அடையாளம் தெரியாமல் இருக்க, ஆடைகளை அகற்றி உடலை முட்புதரில் வீசியுள்ளார்.
இந்நிலையில், ஜெகன் பிரதானை கைது செய்த போலீசார், அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். செல்போனால் ஒரு குடும்பமே சீரழிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: “புருஷனை விட 100 ரூபாய் தான் முக்கியம்!” 100 ரூபாய்க்காக மனைவி செய்த கொடூர செயல்!



