தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயதான பிரசாந்த். வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். கணவன் இல்லாமல் வீட்டில் தனியாக இருந்த சந்தியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அனில் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய பிரசாந்திறக்கு தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, தனது மனைவிக்கு வேறொரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து, கள்ளத்தொடர்பை கைவிடும்படி தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் கணவனின் பேச்சை கேட்காமல் சந்தியா தனது கள்ளக்காதலனுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். மேலும், தங்களின் உறவிற்கு தனது கணவர் இடையூறாக இருப்பதாக தனது கள்ளக்காதலன் அனிலிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவர்கள் இருவரும் சேர்ந்து பிரசாந்த்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி அனில் அதே பகுதியை சேர்ந்த வெங்கட் சாய் என்ற நபரின் உதவியை நாடினார். அவர்கள் திட்டமிட்டபடி கடந்த 29-ந்தேதி பிரசாந்த் வீட்டில் இருந்த போது, வெங்கட் சாய் அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் பிரசாந்துடன் நன்கு பேசி, அவருக்கு அதிக அளவு மது ஊற்றி கொடுத்துள்ளார்.
மது போதை தலைக்கேறி சுயநினைவு இழந்த பிரசாந்த்தை வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த்தை சந்தியாவும் வெங்கட் சாயும் சேர்ந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை முடிந்து பிரசாந்த்தை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
தனது கணவர் உயிரோடு இருந்தால் நாம் சந்திக்க முடியாது என சந்தியா அனிலிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, சந்தியா தனது கணவருக்கு மயக்க ஊசி மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் திரவமான ஹார்பிக்கையும் செலுத்தினார். ஊசி போட்டதும் படுக்கையில் இருந்த பிரசாந்த் துடிதுடித்தார். அப்போது சந்தியா தனது காலால் கணவரை எட்டி உதைத்துள்ளார். இதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த பிரசாந்த் துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும், தனது கணவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகஉறவினர்களிடம் சந்தியா அழுது புலம்பியுள்ளார். ஆனால் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரசாந்தின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சந்தியாவிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் சந்தியா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read: நடுரோட்டில் உல்லாசத்திற்கு அழைத்த கணவன்… நிர்வாணமாக கிடந்த மனைவி… கோவையில் அதிர்ச்சி சம்பவம்!



