இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன்..! மீண்டும் அதிபர் டிரம்ப் சர்ச்சை…!

donald trump narendra modi 030525236 16x9 1

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.


ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப்; கடந்த ஏழு மாதங்களில் மட்டும், முடிவுறாத 7 போர்களை நிறுத்தியுள்ளேன். முடிவில்லாத போர் என அவர்கள் கூறினார்கள். சில நாடுகளில் 31 ஆண்டுகளாக நீடித்து வந்தது. சில நாடுகளில் 28 ஆண்டுகளாக நடைபெற்றது. இரக்கமற்ற முறையில் வெடித்த இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

கம்போடியா – தாய்லாந்து, கொசோவா – செர்பியா, இஸ்ரேல் – ஈரான், எகிப்து – எத்தியோப்பியா மற்றும் அமெரிக்கா – அஜர்பைஜான் நாடுகளின் போர்களும் அடங்கம். இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த போரை இரவு முழுவதும் மத்தியஸ்தம் செய்து முடிவுக்கு கொண்டுவந்ததாகவும், அவர்கள் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக மே 10ஆம் தேதி சமூக வலைதளத்தில் அறிவித்ததாகவும் குறிப்பிட்டார். இதன்மூலம், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.

இந்த சாதனைகளுக்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். ஆனால், போர் இல்லாத சூழலில் பெற்றோர்கள் அரவணைப்பில் குழந்தைகள் வளர்வதே என்னைப் பொருத்தவரையில் மிகப்பெரிய பரிசாகக் கருதுகிறேன். என்னுடைய கவலை பரிசுகளை வெல்வது அல்ல, உயிர்களைக் காப்பதே என கடமை என்றார்.

Vignesh

Next Post

“கூடவே இருந்து நம்பிக்கை துரோகம் பண்ணிட்டீங்களே”..!! பாதுகாவலர் கொடுத்த பரபரப்பு புகார்..!! வேதனையில் உடைந்து போன சூர்யா..!!

Wed Sep 24 , 2025
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர், சினிமாவை தாண்டி அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். சூர்யாவிடம் அந்தோணி என்பவர் தனி பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய […]
Surya 2025

You May Like