இந்த தவறை செய்தால் 3 வருஷத்துக்கு பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது.. EPFO வார்னிங்..!!

EPFO 11zon

மத்திய அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO (Employees’ Provident Fund Organisation) விரைவில் EPFO 3.0 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் PF பணத்தை நேரடியாக ATM அல்லது UPI மூலமாக எடுத்துக் கொள்ள முடியும்.


தற்போதைய நிலையில், தொழிலாளர்கள் தங்களது PF (Provident Fund) பணத்தை நெட் பேங்கிங் மூலமாக மட்டுமே பெற முடியும். இதற்காக தொழிலாளர் தமது வங்கி கணக்கை EPFO இணையதளத்தில் இணைக்க வேண்டும், பிறகு ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல்முறை பல கட்டங்களைக் கொண்டுள்ளது. இதற்கு கூடுதல் காலம் ஆகும்.

ஆனால் EPFO 3.0 திட்டம் செயல்பட்டால், தொழிலாளர்கள் உடனடியாக, சுலபமாக PF பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதே நேரத்தில், EPFO தவறான பயன்பாடுகளுக்கு பணம் எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. PF பணத்தை பயன்படுத்தும் முக்கிய காரணங்கள்:

  • வீட்டுக்கான கட்டிட பணம், வீடு வாங்குதல், கடன் செலுத்துதல்
  • அவசர மருத்துவச் செலவு
  • குழந்தைகளின் கல்வி
  • திருமணம் அல்லது குடும்ப அவசரச் செலவுகள்

தவறான நோக்கத்திற்காக பணம் எடுத்தால், EPFO அந்த தொகையை மீட்டெடுத்து, அபராதமும் விதிக்கும். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பணம் எடுக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்போது முழுமையாக PF பணம் எடுக்கலாம்? தற்போதைய சூழலில் இரண்டு காரணங்களுக்காக பணத்தை முழுமையாக எடுக்கலாம். ஒன்று குறிப்பிட்ட வயதை அடைந்ததும் ஓய்வு பெறுவது அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தால் முழுமையாக பணம் எடுக்கலாம்.

EPFO அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியதாவது: “தவறான காரணங்களுக்காக பி.எஃப். பணத்தை எடுப்பது 1952-ஆம் ஆண்டு பி.எஃப். திட்டத்தின் கீழ் பணத்தை மீட்டெடுக்க வழிவகுக்கும். உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். PF பணத்தை சரியான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். உங்கள் PF உங்கள் வாழ்நாள் பாதுகாப்பு கவசம்!” இதன் மூலம் தொழிலாளர்களுக்கு PF பணத்தை உடனடியாக பெறும் வசதி உருவாகி, சேமிப்பையும் பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் உறுதி செய்யும் முயற்சி EPFO மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more :மது அருந்துவது மூளைக்கு எவ்வளவு ஆபத்தானது? புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

English Summary

If you make this mistake, you will not be able to withdraw PF money for 3 years.. EPFO ​​warning..!!

Next Post

நவபஞ்சம ராஜயோகம்.. இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்!

Fri Sep 26 , 2025
ஜோதிடத்தில் கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இருப்பினும், சில நேரங்களில் கிரகங்களின் சேர்க்கையால் யோகங்கள் உருவாகின்றன. இருப்பினும், இந்த முறை தசரா பண்டிகையின் போது, ​​அனைத்து ராஜ யோகங்களிலும் மிகவும் சக்திவாய்ந்த நவபஞ்சம ராஜ யோகம் உருவாகும். இது மிகவும் நல்ல பலன்களைத் தரும். அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மக்கள் தசரா பண்டிகையைக் கொண்டாடுவார்கள். இருப்பினும், இன்று புதன், குரு மற்றும் சுக்கிரன் ஆகிய […]
zodiac signs

You May Like