தீபாவளி பண்டிகை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு…! கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்…!

tn school 2025

தீபாவளி பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் கவனக் குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீ விபத்து ஏற்படலாம். இது தவிர, உயிர்சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குழந்தைகளுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படக் கூடும். இத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதும், தடுப்பதும் நமது கடமையாகும். எனவே, பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

பட்டாசுகளை கொளுத்தும் போது தளர்வான ஆடைகள், எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது அருகே ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். கையில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அதேபோல், கூட்டமான இடங்கள், தெருக்கள், சாலைகளில் வெடிக்க வேண்டாம். பெற்றோர் முன்பு பிள்ளைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. வெடிக்காத பட்டாசுகளை பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், இரவு 10 முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தகவல்களை பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து ஆசிரியர்கள் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மன்னர்கள் கட்டிய கோயில்..!! எப்போதுமே வற்றாமல் பொங்கி வழியும் நந்தி தீர்த்தம்..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?

Wed Oct 15 , 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுக்கு அருகில், 24 மணி நேரமும் வற்றாமல் பொங்கி வழியும் ஒரு அதிசயமாக கருதப்படும் தீர்த்தம் குறித்து பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் தீர்த்தம், மனிதர்களின் கர்ம வினைகள் மற்றும் பித்ரு தோஷங்களைப் போக்கும் சக்தி கொண்டது என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த அதிசய தீர்த்தம் அமைந்துள்ள பகுதியில், வரலாற்றுச் சிறப்புமிக்க மார்க்கண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சிவன், லிங்க […]
Nandhi 2025

You May Like