டிகிரி முடித்த நபர்களா நீங்க…? ரூ.20,000 ஊதியம்… இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிமுகம்…!

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Faculty & Financial Literacy Counsellor பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 10 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது.


மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணியில் முன்ன அனுபவம் இருப்பது அவசியம். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக நவம்பர் 5-ம் தேதி ஆகும். மாத ஊதியம் ரூ.20,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.indianbank.in/wp-content/uploads/2022/10/FLC-FACULTY-RANIPET-ADVT-IN-BANK-PORTAL.pdf

Vignesh

Next Post

பெற்றோர் ஏமாற்றியதால் காதலனுடன் உயிரை மாய்த்துக் கொண்ட பிளஸ்2 மாணவி..!!

Fri Oct 28 , 2022
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 12ஆம் வகுப்பு மாணவி, காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள செம்மண் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. அந்த பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வரும் கோபிக்கும், அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோபியும், 12ஆம் வகுப்பு […]
Death

You May Like