‘ஜெயிலர் 2’ மிரட்டலான வசூல் வேட்டை! கதிகலங்கிய பாக்ஸ் ஆபீஸ்!. ரூ.300 கோடியை மிக வேகமாக கடந்த முதல் தமிழ் படம்!

WhatsApp Image 2026 10 15 at 12.24.36 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியாவில் பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு படைத்துள்ளது. இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் செய்யாத சாதனையாக, வெறும் 7 நாட்களில் இந்தியாவில் ரூ.300 கோடி நெட் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.


சாக்னிக் (Sacnilk) தரவுகளின்படி, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்சய் குமார் நடிப்பில் வெளியான ‘2.0’ திரைப்படம் 8 நாட்களிலும், விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் 11 நாட்களிலும், முதல் பாகமான ‘ஜெயிலர்’ திரைப்படம் 16 நாட்களிலும் ரூ.300 கோடி வசூலை எட்டிய நிலையில், ‘ஜெயிலர் 2’ அவற்றை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த அக்டோபர் 15 அன்று ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் நாளில் மட்டும் ரூ.59.70 கோடி வசூலித்தது. தொடர்ந்து வெள்ளி (ரூ.37.10 கோடி), சனி (ரூ.47.25 கோடி), ஞாயிறு (ரூ.55.85 கோடி), திங்கள் (ரூ.42.35 கோடி), செவ்வாய் (ரூ.46.80 கோடி), புதன் (ரூ.28.15 கோடி) மற்றும் வியாழன் (ரூ.17.15 கோடி) என முதல் வார இறுதியில் இந்தியாவின் நெட் வசூல் ரூ.334.35 கோடியை எட்டியது.

வெள்ளிக்கிழமை அன்று மேலும் ரூ.14.50 கோடியைச் சேர்த்ததன் மூலம், 9 நாட்கள் முடிவில் படத்தின் இந்திய நெட் வசூல் ரூ.348.85 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விரைவில் ரூ.350 கோடி நெட் வசூலை எட்டவுள்ள இப்படத்தின் இந்திய கிராஸ் வசூல் ரூ.408.55 கோடியாக உள்ளது.

அதேபோல், வெளிநாட்டு சந்தைகளின் பங்களிப்புடன் சேர்த்து இப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.628.05 கோடியை எட்டியுள்ளது. 2023-இல் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் வாழ்நாள் உலகளாவிய வசூலான ரூ.604.74 கோடியை, இந்த இரண்டாம் பாகம் வெறும் 8 நாட்களிலேயே (ரூ.606.05 கோடி) முறியடித்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் மீண்டும் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், யோகி பாபு, விநாயகம், வித்யா பாலன், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவச்சந்தர் இசையமைத்துள்ளார்.

1newsnationuser5

Next Post

"அழகான காதல் கதை; அவர் அவ்வளவு அழகு"!. ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்த தருணத்தை நினைவுகூர்ந்த சோனியா காந்தி!

Sat Oct 24 , 2026
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தான் எழுதியுள்ள ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற சுயசரிதை நூல் குறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூல் வரும் நவம்பர் 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்த புத்தகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனான மறக்க முடியாத நினைவுகள் மற்றும் தனது இளமைக்காலம் முதல் தற்போதைய காலம் வரையிலான […]
Sonia Gandhi 30kb

You May Like