கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குஜராத் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், இன்று முதல் தனது விசாரணையை நடத்த உள்ளார்.
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி வில்லிவாக்கம் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தவெக தலைவரான விஜய்யை கடுமையாக விமர்சித்தும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குஜராத் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், இன்று முதல் தனது விசாரணையை நடத்த உள்ளார். தமிழக அரசாங்கம் அமைத்த சிறப்பு விசாரணை குழு அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தது. விரைவில் சிபிஐ விசாரணையும் நிறைவடைந்து அதற்கான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



