கரூர் சம்பவம்… போதிய பாதுகாப்பு கொடுக்காத அரசு…! விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த அ.மலை…!

vijay annamalai 2025

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வரும் நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; கரூரில், தவெக தலைவர் விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது. உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சோகம்..! கரூர் விஜய் பரப்புரையில் உயிரிழந்த 39 பேர் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி...!

Sun Sep 28 , 2025
கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், கரூர் மாவட்ட […]
karur mk Stalin 2025

You May Like