Wow…! இவர்களுக்கும் 33 சதவீத ஊதிய உயர்வு…! ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்…! மத்திய அரசு அறிவிப்பு…

காதி காட்டன் (கதர் பருத்தி) நெசவாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வை காதி கிராமத் தொழில் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச்சில் நடைபெற்ற காதி கிராமத் தொழில் ஆணையத்தின் 694-வது கூட்டத்தில் பிரதமர் விடுத்த அழைப்பை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் ஊதியத்தை நூல் சுருளுக்கு ரூ.7.50-லிருந்து ரூ.10-ஆக உயர்த்த, மனோஜ் குமாரின் தலைமையில் இயங்கும் கேவிஐசி முடிவு செய்தது. இதன்மூலம் கைவினைஞர்களின் மாதாந்திர வருமானம் 33 சதவீதமும், நெசவாளர்களின் வருமானம் 10 சதவீதமும் உயர்கிறது. இந்த முடிவு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கேவிஐசி உற்பத்திப் பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கைவினைஞர்களின் வருமானத்தைப் பெருக்கவும், ஏழைகளுக்கு வேலை வழங்கவுமான நோக்கத்துடன் அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

Vignesh

Next Post

குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு..!! தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு..? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!!

Wed Feb 15 , 2023
குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 24.07.2022 அன்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர். […]

You May Like