அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்கு.. நீதிமன்றத்தில் எழுந்த கோரிக்கை!

minister mariam wilson court 30kb

சட்டப்பேரவையில் அமைச்சர் பேசிய விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. லஞ்சம் கொடுத்ததாகப் பேசிய நிதி அமைச்சர் என். மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரில், கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் மரிய வில்சன் பேசியிருந்தார். அந்தச் சம்பவத்தில் தானும் பாதிக்கப்பட்டதாகவும், பணப் பரிமாற்றம் நடைபெற்றதை நேரில் அறிந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.

அமைச்சரின் பேச்சைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. சிவசுப்பிரமணியம் நீதிமன்றத்தை நாடியுள்ளார். தனது மனுவில், லஞ்சம் கொடுத்ததாக அமைச்சர் வெளிப்படையாகப் பேசியிருப்பதால், அந்தத் தகவலின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக ஆகஸ்ட் 27-ம் தேதியே லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சிறப்புரிமை, பேரவைக்கு வெளியே நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றச்செயல்களுக்கு பாதுகாப்பாக அமையாது என்பதும் அவரது வாதமாக உள்ளது.

இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தி, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மரிய வில்சனின் கல்வி நிறுவனங்கள் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனால், அமைச்சர் மற்றும் அவரது கல்வி நிறுவனங்கள் தொடர்பாக எழுந்துள்ள புகார்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அமைச்சரின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Also Read: 2வது முறையாக பெற்றோராகும் மகிழ்ச்சியில் கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதி!. திரை பிரபலங்கள் வாழ்த்து!.

Saranya

Next Post

“அம்மா... வலிக்குது” கதறிய 6 வயது சிறுமி.. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Wed Oct 7 , 2026
பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. இத்தகைய சூழலில், சென்னையின் திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை மீண்டும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர் […]
31f91e8405eb7a5289bc035457aa16a711282f6b65472813b76c1b673d991f7b

You May Like