உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 29ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாக வாய்ப்புள்ள புதிய புயலுக்கு, மியான்மர் பரிந்துரைத்துள்ள MICHAUNG என பெயரிடப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், வரும் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Dailyhunt

Chella

Next Post

பால் கறக்கும் இயந்திரம் பாதுகாப்பானதா?… மாட்டின் மடியை பாதிக்க வாய்ப்பு!

Mon Nov 27 , 2023
மாடுகளின் மடியில் கைகளால் பால் கறப்பதை நம்மூர் பால்பொருள் தயாரிப்புத் தொழிலாளர்கள் காலாகாலமாகச் செய்து வருகின்றனர். பசு மற்றும் எருமை மாட்டின் மடியில் பால் கறப்பதே தனித் திறமை. நன்றாகப் பழகிய மாடு எஜமானரை மட்டுமே மடியில் பால் கறக்க அனுமதிக்கும். மாட்டின் மடியில் தண்ணீர் தெளித்து, நன்றாக சுத்தம் செய்த கைகளைக் கொண்டு மடியை லாவாகமாக பால் கறக்கும் பால்காரர்கள் அதில் இருந்து ஆடையைப் பிரித்து எடுத்து, பின்னர் […]

You May Like